நடிகை ஜெனிலியா வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .
தமிழ் திரையுலகில் நடிகை ஜெனிலியா ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதையடுத்து நடிகர் விஜய்யின் சச்சின் படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். மேலும் இவர் சந்தோஷ் சுப்பிரமணியம் , உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார் . இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி ,தெலுங்கு போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இதன்பின் ஜெனிலியா நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
சமீபத்தில் நடிகை ஜெனிலியா ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ளும் போது கீழே விழுந்ததால் கையில் முறிவு ஏற்பட்டது. ஆனால் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத ஜெனிலியா ஜாலியான வீடியோவாக வெளியிட்டு தனது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார் . இந்நிலையில் தனது நண்பர்களுடன் இணைந்து மாஸ்டர் படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு ஜெனிலியா குத்தாட்டம் போட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.