2021 ஆம் ஆண்டுக்கு முன் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இதற்கான தடுப்பூசி மருப்தை கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட 11 தடுப்பு மருந்துகளை பரிசோதிக்கும் முயற்சிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதே போல் வருகின்ற ஆகஸ்ட் 15 ஆம் தேதிக்குள் இந்த தடுப்பு மருந்து நடைமுறைக்கு வந்துவிடும் என ஐ சி எம் ஆர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் இதனை மறுத்து விரிவான அறிக்கை ஒன்றை ICMR வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கொரோனா தடுப்பு ஊசி 2021 ஆம் ஆண்டுக்கு முன் நடைமுறைக்கு வர சாத்தியமில்லை என மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதில் கோவாக்சின், சைக்கோட்டிவ் உள்ளிட்ட பல தடுப்பு மருந்துகள் பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றன. இவை அனைத்தும் 2021 ஆம் ஆண்டுக்கு முன் பயன்பாட்டிற்கு வருவதற்கு சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.