குழந்தைகளின் நலன் கருதியே கட்டாய தடுப்பூசி போடப்படுவதாக மனித உரிமைகள் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான செக் குடியரசின் சட்டப்படி குழந்தைகளுக்கு இருமல், டிப்தீரியா டெட்டனஸ், ஹெபடைடிஸ் பி மற்றும் தட்டம்மை உள்ளிட்ட ஒன்பது நோய்களுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயமாக்கப்பட்டது. இந்தத் தடுப்பூசியைப் போட மறுக்கும் குடும்பங்களுக்கு அபராதம் மட்டும் அல்லாது அவர்களின் குழந்தைகளுக்கு நர்சரி பள்ளியில் இடம் அளிக்க மறுக்கப்படும் என்பதாகும். இதனையடுத்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது கட்டாயம் என்ற திட்டத்திற்கு இணங்க மறுக்கும் குடும்பங்கள் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் விவாதிக்கும்போது செக் சுகாதார அதிகாரிகளால் நிர்வகிக்கப்படும் கட்டாய தடுப்பூசிகள் குழந்தைகளின் நலன் கருதியே போடப்படுகிறது. ஒவ்வொரு குழந்தையும் கடுமையான நோயிலிருந்து மீட்பதற்காகவே தடுப்பூசி போடப்படுவதன் நோக்கமாகும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பில் கொரோனா தடுப்பூசிகளை நேரடியாக குறிப்பிடாமல் மற்ற நோய்களுக்கான தடுப்பூசிகள் மட்டுமே குறிப்பிடப்பட்டதால் தடுப்பூசியை ஏற்க மறுத்த குடும்பங்கள் மத்தியில் இது விழிப்புணர்வாகவே இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.