நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாமை ஒத்திவைக்குமாறு மத்திய அரசு சுகாதாரத்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளது.
நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஜனவரி 17ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிவித்திருந்தார். ஆனால் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தொற்று தடுப்பூசி போடும் பணியானது துவங்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக போலியோ சொட்டு மருந்து முகாமானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் போலியோ சொட்டு மருந்து முகாம் மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்ககோரி மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. எனவே மத்திய அரசின் அறிவிப்பின்படி போலியோ சொட்டு மருந்து முகாமானது தமிழகத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.