அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது.
ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் செங்கல்பட்டு மாவட்டம் நல்லம்பாக்கம் ஊராட்சி சார்பாக கண்டிகை கிராமத்தில் அமைந்திருக்கும் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் வைத்து பொதுமக்களுக்கு குழந்தை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து சுகாதார பணியாளர்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆகியோர் பொதுமக்களுக்கு கொரோனா தொற்று பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி உள்ளனர்.