Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மின் வசதி இல்லாத முகாம்…. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் நடந்த பணி…. கோவையில் பரபரப்பு…!!

செல்போன் டார்ச் வெளிச்சத்தை வைத்து செவிலியர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாலை 5 மணிக்கு தொடங்கிய தடுப்பூசி போடும் பணியானது இரவு 7 மணிக்கு பிறகும் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஆனால் தடுப்பூசி செலுத்தும் வகுப்பறையில் மின்வசதி இல்லாததால் செல்போனில் உள்ள டார்ச் வெளிச்சத்த்தை வைத்து செவிலியர்கள் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும் போது, காலை 10 மணிக்கு பதிலாக மதியத்திற்கு பிறகு தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த பள்ளிக்கு 400 தடுப்பூசி ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும் இரவு நேரத்தில் மின்சார வசதி செய்து கொடுக்கவில்லை. இந்நிலையில் தடுப்பூசி போடும் பணியானது இரவு நேரம் வரை நீட்டிப்பது பள்ளி மற்றும் பேரூராட்சி நிர்வாகத்தினருக்கு தெரிந்த போதிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. எனவே சிறப்பு முகாம்கள் நடைபெறும் பட்சத்தில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |