மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் பொருட்டு அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் வாகனங்களின் மூலம் மட்டுமே காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் 1600 க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து பத்திரிகை விநியோகம் செய்பவர், பால் விநியோகம் செய்பவர், ஆட்டோ டிரைவர் போன்றவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து சென்னை மாநகராட்சி நிர்வாகம் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று தடுப்பூசியைப் போட ஏற்பாடு செய்துள்ளது. மேலும் தடுப்பூசி முகாம் அமைப்பதற்காக மாற்றுத்திறனாளிகள் 9700799993 மற்றும் 18004250111 என்ற எண்களை தொடர்பு கொண்டால் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி முகாம் ஏற்படுத்தப்படும் என கமிஷனர் சுகன் தீப் சிங் தெரிவித்துள்ளார்.