தடுப்பூசி போடுவதற்காக சென்ற பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் நின்றதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள தாராபுரம் அலோசியஸ் பள்ளியில் தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்றுள்ளது. இதற்காக காலை 8 மணி முதலே பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக அங்கு குவிந்தனர்.
ஆனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக சென்ற மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்ததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்கள் சாலையின் இரு பக்கங்களிலும் வாகனங்களை நிறுத்தி வைத்ததால் அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே டோக்கன்கள் அடிப்படையில் குறிப்பிட்ட அளவு மக்களுக்கு தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.