கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரு பெண் திடீரென மரணம் அடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
நீண்ட முயற்சிக்குப் பிறகு கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பல நாடுகளில் மக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பலகட்ட பரிசோதனைக்கு பிறகு இந்த தடுப்பூசி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி போட்டவர்களில் சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில் போர்ச்சுகல் நாட்டில் தடுப்பூசி போட்ட பெண் இரண்டு தினங்களுக்கு பின் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சோனியா என்ற 41 வயது பெண்மணி டிசம்பர் 30-ம் தேதி அன்று தடுப்பூசி போட்டு உள்ளார். புத்தாண்டு தினத்தன்று எதிர்பாராத விதமாக திடீரென மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவருக்கு உடல்நலக் கோளாறுகள் கிடையாது. மேலும் தடுப்பூசி போட்ட பிறகு எந்த வித பக்கவிளைவுகளும் இல்லை. இந்நிலையில் அவர் எவ்வாறு உயிரிழந்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மருத்துவ ஊழியராக சோனியா பணியாற்றி வருவதால் அவருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டது. தடுப்பூசி போட்ட பிறகு அவர் மரணமடைந்தது சந்தேகத்தை எழுப்பியுள்ளது.