Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கண்டிப்பா இதை போடணும்… தீவிரமாக நடைபெறும் பணி… நகராட்சி அதிகாரிகளின் முயற்சி…!!

நகராட்சி சார்பில் 18 வயதிலிருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்று வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் நகராட்சி சார்பாக பூக்கடை சத்திரம் பகுதியில் உள்ள டி.வி.எஸ் உயர்நிலைப்பள்ளி மற்றும் பச்சையப்பன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி போன்ற 5-க்கும் மேற்பட்ட பள்ளி கூட்டங்களில் 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சிறப்பு முகாம்கள் அமைத்து தடுப்பூசி போடும் பணியானது நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முகாமிற்கு வந்து தடுப்பூசி போட்டு சென்றுள்ளனர். இவ்வாறு சிறப்பு முகாம் அமைத்து தடுப்பூசி போடும் பணியை நகராட்சி அதிகாரிகள் சிறப்பாக நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து இந்த சிறப்பு முகாம்களை நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆய்வு செய்துள்ளார்.

Categories

Tech |