கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக பிரபல நாடுகள் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொரோனாவால் பிரிட்டன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இறப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் பாரிஸ், மாட்ரிட் மற்றும் லிஸ்பன் ஆகிய இடங்களில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்று கூறப்பட்டாலும், இதன் பின்னணி ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசி வினியோகம் தொடர்பாக ஏற்படும் கடும் போக்கான நிலைப்பாடு தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. அதுமட்டுமின்றி பிரிட்டனில் தடுப்பூசி ஏற்றுமதியை தடுத்து நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு அடுத்த நான்கு வாரங்களுக்கு புதிதாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் முதல் டோஸ் எடுத்துக்கொண்டவர்கள் இரண்டாவது டோஸ் எடுத்துக் கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போர்த்துக்கல் நாட்டில் இரண்டு மாதங்கள் வரை தடுப்பூசி வழங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் பத்து நாட்களுக்கு தடுப்பூசி வினியோகம் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பிரிட்டனில் புதிய நோவாவாக்சீன் தடுப்பூசி அனுமதி கிடைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.