அனைத்து பழங்குடியின மக்களுக்கும் நீலகிரி மாவட்டத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் காட்டுநாயக்கர், தோடர் உள்பட 6 வகையான பழங்குடி இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து வனப்பகுதிக்குள் ஓடி விடுகின்றனர். இதனால் சுகாதாரதுறையினர் இந்த மக்களை நேரில் சென்று பார்த்து தடுப்பூசி போட்டுக்கொள்வதன் அவசியம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துவ குழுவினர் வேலைக்கு சென்ற கூலி தொழிலாளர்கள் வீடு திரும்பும் வரை காத்திருந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இவ்வாறாக மொத்தம் 21 ஆயிரத்து 500 பேருக்கு மருத்துவ குழுவினர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அனைத்து பழங்குடியினருக்கும் முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட முதல் மாவட்டமாக நீலகிரி உள்ளது. இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும் போது, ஜூன் மாத இறுதிக்குள் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முழுவதுமாக செலுத்தப்பட வேண்டும் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து பழங்குடி இன மக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டு இலக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.