Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மறந்த மக்கள்…. தடுப்பூசி போட குவிந்த கூட்டம்…. அரசு மருத்துவமனையில் பரபரப்பு….!!

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றிற்க்கான தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் அரசு மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டு கொண்டு சென்றுள்ளனர். அப்போது தமிழக அரசு அறிவித்திருந்த கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியின்றி தடுப்பூசி போடுவதற்காக கூட்டமாக குவிந்துள்ளனர். மேலும் இதில் இதுவரை 89, 132 நபர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Categories

Tech |