Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… இதுவரை போடப்பட்ட தடுப்பூசிகள்… மாவட்ட நிர்வாகம் தகவல்..!!

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 269 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 21 பேருக்கும், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆயிரத்து 485 பேருக்கும் என 2,506 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 29 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 269 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 298 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் கோவேக்சின் 450-ம், கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி 6,610-ம் கையிருப்பில் உள்ளது. இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் 50 பேருக்கு கோவேக்சின் கொரோனா தடுப்பூசியும், 821 பேருக்கு கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியும் என மொத்தம் 871 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |