தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் அதிரடி பிரச்சாரம் ஒன்றை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது.
தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தில் உள்ள மே சாயம் என்னும் மாவட்ட நிர்வாகம் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளும் கிராமவாசிகளில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து அவருக்கு பரிசாக 10,000 தாய் பாத் ( 225 பவுண்ட் ) மதிப்புள்ள மாடு ஒன்றை வழங்கபோவதாக அறிவித்துள்ளது. மேலும் 24 வாரங்களுக்கு என ஒரு வாரம் ஒருவருக்கு மாடு என்று 43,000 நபர்கள் உள்ள மாவட்டத்தில் பரிசு வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்பால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கில் இருந்த ஆயிரக்கணக்காக உயர்ந்துள்ளதாக அந்த மாவட்ட நிர்வாகம் தலைவர் பூணலுக்கே தம்தரனுராக் தெரிவித்துள்ளார்.
மேலும் தாய்லாந்தில் உள்ள மற்ற மாகாணங்களிலும் பொதுமக்களிடையே தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக சலுகைக் கூப்பன்கள், தங்க நகை மற்றும் ரொக்கம் என பல்வேறு பரிசுகளை அறிவித்து பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர். தாய்லாந்தில் 66 மில்லியன் மக்கள்தொகையில் ஏற்கனவே முதல் தடுப்பூசியை 1.64 மில்லியன் பேர் போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் ஏழு மில்லியனுக்கும் அதிகமானோர் இதுவரை தடுப்பூசி போடுவதற்காக பதிவு செய்துள்ளனர்.