Categories
சேலம் மாவட்ட செய்திகள்

7,700 கோவிஷீல்டு தடுப்பூசி… சென்னையிலிருந்து கொண்டு வரப்பட்டது… அலைமோதிய மக்கள் கூட்டம்..!!

சேலம் மாவட்டத்திற்கு சென்னையிலிருந்து 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலை தீவிரமாக அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது.

இதுவரை மாவட்டத்தில் 49 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது சென்னையிலிருந்து 7,700 கோவிஷீல்டு தடுப்பூசிகள் சேலம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதில் ஆத்தூர் சுகாதார நிலையத்திற்கு 2,100 தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Categories

Tech |