சேலம் மாவட்டத்தில் சுகாதார நிலையத்தில் கூட்டத்தை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் முகாமை இடம் மாற்றம் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள குமாரசாமிபட்டியிலிருக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதனால் தடுப்பூசி போடுவதற்கு பொதுமக்கள் காலை 8 மணிக்கு சுகாதார நிலையத்திற்கு வருவதால் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது. மேலும் சில சமயம் தடுப்பூசி போடுவதற்கு காலதாமதம் ஏற்படுவதால் ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்க தடுப்பூசி செலுத்தும் முகாமை சீரங்கன்பாளையம் பகுதியிலுள்ள ஸ்ரீ சாரதா பாலமந்திர் மெட்ரிக் பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு சென்று அங்கு அமைக்கப்பட்ட இருக்கையில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.