Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கை… சட்டமன்ற உறுப்பினரால் தொடங்கப்பட்ட முகாம்… திரளானோர் பங்கேற்பு..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி பகுதியில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

சிவகங்கை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் ஊராட்சி ஹவுஸிங் போர்டு பகுதியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்.

அந்த தடுப்பூசி முகாமில் தி.மு.க. மாவட்ட சட்ட பாதுகாப்பு குழு உறுப்பினர் வக்கீல் பாலசுப்பிரமணியன், மாவட்ட கவுன்சிலர் ராதா பாலசுப்பிரமணியன், ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் புதுவயல் பாலசுப்ரமணியன், பசும்பொன் மனோகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர். மேலும் அந்த முகாமில் கொரோனா தடுப்பூசி 500 பேருக்கு போடப்பட்டுள்ளது.

Categories

Tech |