ஒமிக்ரான் தொற்றை எதிர்க்கக்கூடிய புதிய தடுப்பூசியை பரிசோதிக்க 1240 நபர்களை பைசர் நிறுவனம் தேர்வு செய்திருக்கிறது.
ஒமிக்ரான் தொற்றுக்கு எதிராக பைசர் நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்திருக்கிறது. இந்நிலையில், இத்தடுப்பூசியின் பாதுகாப்பு திறன் மற்றும் நோய் எதிர்ப்பு தன்மையை பரிசோதிப்பதற்காக, 18 லிருந்து 55 வயது வரை உள்ள 1240 நபர்களை ஆய்வுக்கு உட்படுத்தவுள்ளதாக பைசர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
மேலும், பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ஆல்பர்ட் பவுர்லா, ஒமிக்ரான் தொற்றுக்கு எதிரான இத்தடுப்பூசி வரும் மார்ச் மாதத்தில் தயாராகும் என்று கூறியிருக்கிறார்