உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய நாட்டிற்கான பிரதிநிதி டெல்டா வைரஸை கட்டுப்படுத்த முகக்கவசம் மற்றும் தடுப்பூசி இரண்டும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
டெல்டா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ள நிலையில், தடுப்பூசி செலுத்திக்கொண்டாலும், முகக்கவசம் அணிந்துகொண்டு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் ரஷ்ய பிரதிநிதியான வுஜ்னோவிக் கூறியிருக்கிறார்.
யூடியூபில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அவர் கூறியுள்ளதாவது, டெல்டா வைரஸை கட்டுப்படுத்த தடுப்பூசியுடன் சேர்த்து முகக்கவசமும் அணிந்துகொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இன்னும் சிறிது காலத்திற்கு கட்டுப்பாடுகளை பின்பற்றுவது அவசியம். இல்லையெனில் மீண்டும் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்படும்.
தடுப்பூசி கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும். அப்போது தான் தொற்று வேகமாக பரவும் திறனை கட்டுப்படுத்தலாம் என்று கூறியிருக்கிறார்.