Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டால் மட்டுமே மது விற்பனை… உ.பி அரசு அதிரடி…!!!

உத்திரபிரதேச மாநிலத்தில் தடுப்பூசி போட்டு போடுபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசு கட்டாயமாக்கி கொண்டு வருகின்றது. அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே சம்பளம் வழங்கப்படும் என்று அரசு தெரிவித்து வருகின்றது.

இந்நிலையில் உத்தர பிரதேசம் எட்வாடாவில் தடுப்பு ஊசி போட்டு கொள்பவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசி சான்றிதழ் காட்டுபவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்ய வேண்டும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் பிரோசாபாத் மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டால் மட்டுமே அடுத்த மாத சம்பளம் தரப்படும் என அறிவித்துள்ளது.

Categories

Tech |