Categories
உலக செய்திகள்

“ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!”… முதியவர்களுக்கு தடுப்பூசியை கட்டாயமாக்கிய நாடு…!!

ஐரோப்பிய நாடான கிரீஸில் 60 வயதுக்கு அதிகமான நபர்கள் கட்டாயம் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது ஒமிக்ரான் என்ற கொரோனாவின் புதிய வகை மாறுபாடு, உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. எனவே, அந்த வைரஸை தங்கள் நாட்டில் பரவ விடாமல் தடுக்க, கிரீஸ் அரசு முதியவர்களுக்கு கட்டாயம் தடுப்பு செலுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறது.

எனவே 60 வயதுக்கு அதிகமான நபர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் ஒவ்வொரு மாதமும் அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதத்தில் 5.8 இலட்சம் நபர்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். அதில், 60 வயதுக்கு அதிகமானவர்கள், 60 ஆயிரம் பேர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |