ஆஸ்திரிய அரசு தடுப்பூசி செலுத்தாத நபர்களுக்கு 3 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்திருக்கிறது.
உலக நாடுகள் முழுவதும் கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாக போராடி வருகிறது. அந்த வகையில், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரிய நாட்டில் கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் முதல் தேதிக்குள் அனைத்து மக்களும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்தாதவர்கள், 3600 யூரோக்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அபராதம் செலுத்த முடியவில்லை எனில் ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை அந்நாட்டில் 66% நபர்கள் தான் தடுப்பூசி எடுத்துக் கொண்டனர். மேலும், அங்கு முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.
மேலும் இரண்டு தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள், வீட்டை விட்டு வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. வீட்டுக்குள் இருந்தபடியே மாணவர்கள் பாடங்களை கற்க அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.