Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசியால் ஏற்பட்ட பாதிப்பு… 443 பேருக்கு பக்க விளைவு… அதிர்ச்சியில் மக்கள்…!

நாடு முழுவதும் 2,24,301 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்ட நிலையில் 443 பக்க விளைவுகள் ஏற்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுதொடர்பான அறிக்கையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் ஜனவரி 16 அன்று 1.90 லட்சத்திற்கு மேற்பட்டோர்க்கும், ஜனவரி17 அன்று 17,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

ஆக மொத்தம் இதுவரை 2,24,301 மருத்துவ பணியாளர்களுக்கு கோவிட் -19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 447 பேருக்கு பக்க விளைவுகள் கொண்ட எதிர்வினைகள் கண்டறியப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |