தடுப்பூசி மற்றும் சொட்டுமருந்து போடும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
பிறந்த குழந்தைகளுக்கு பிறந்தது முதல் 5 வயது வரை மாத இடைவெளி விட்டு தடுப்பூசி போடப்படுவது முக்கியம். மேலும் குழந்தைகளுக்கு அவ்வப்போது போலியோ போன்ற சொட்டு மருந்துகளும் தமிழக சுகாதாரத் துறையினர் மூலமாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் பணிகள் நிறுத்தப்படுவதாக தமிழக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
கோவையில் தடுப்பூசி போட்டுக் கொண்ட இரண்டு குழந்தைகள் மூன்று மணி நேரத்தில் உயிரிழந்தது. இது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பெண்டா, ரெட்டா தடுப்பூசிகள், சொட்டு மருந்து போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும், ஏற்கனவே தடுப்பூசி போடப்பட்ட ஏழாயிரம் குழந்தைகள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.