நியூசிலாந்து அரசு 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்க அனுமதி வழங்கியிருக்கிறது.
நியூசிலாந்தில் பைசர் உட்பட பல தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் 5 லிருந்து 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி அளிக்க நியூசிலாந்து அரசு அனுமதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு 11 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு தவணை பைசர் தடுப்பூசியளிக்க தற்காலிகமாக அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது. மேலும் குழந்தைகளுக்கு தடுப்பூசி அளிக்கும் பணிகள் அடுத்த வருடம் ஜனவரி கடைசிக்குள் செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருக்கிறது.