அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதி வழங்குமாறு பைசர் நிறுவனம் விண்ணப்பித்திருக்கிறது.
அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு அதிகமான அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசியளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆறு மாதத்திலிருந்து நான்கு வயது வரை இருக்கும் குழந்தைகளுக்கும் தடுப்பூசியளிக்க அவசரகால அனுமதியளிக்க வேண்டும் என்று பைசர் நிறுவனம், அமெரிக்க மருந்து மற்றும் உணவுத் துறையிடம் விண்ணப்பித்திருக்கிறது.
வருங்காலத்தில் புதிதாக உருமாறும் வைரஸ் பரவலை தவிர்ப்பதற்காக மூன்றாம் தடுப்பூசி செலுத்தவும் அனுமதி கோரப்படும் என்று அந்நிறுவனம் கூறியிருக்கிறது. மேலும் பக்கவிளைவுகளை தவிர்ப்பதற்காக குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தடுப்பூசியின் அளவு குறைக்கப்படுகிறது. அமெரிக்காவில் ஐந்து வயதுக்கு குறைவான குழந்தைகள் இரண்டு கோடியே 30 லட்சம் பேர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.