ஆரம்பத்திலேயே கொரோனாவின் மரபணுக்களை வரிசைப்படுத்தி தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீன அரசு மிரட்டியுள்ளது
சீன மக்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான பங்கெடுப்பது மாமிச சந்தைகளும் விலங்குகளும் ஆனால் அதுவே தற்போது உலகம் முழுவதும் கொரோனா எனும் பெயரில் ஆட்டம் போட்டு வருகிறது. சீனா கொரோனா விவகாரத்தில் உண்மையை மறைக்கிறது என அமெரிக்கா குற்றம் சாட்டி வந்த நிலையில் கொரோனா கிருமிகளின் மரபணுக்களை வரிசைப்படுத்தி ஜனவரியிலேயே இதற்கான தீர்வை கண்டறிந்த ஆய்வாளரை சீனா மிரட்டிப் பணிய வைத்ததாக தகவல் வெளிவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் வூகான் நகரில் கொரோனா பரவத் தொடங்கியதும் பாதிக்கப்பட்ட மக்களிடமிருந்து மாதிரிகளை சேகரித்து உறுதிப்படுத்தியுள்ளார் அந்த ஆய்வாளர். தொடர்ந்து மூன்று நாட்களில் மரபணுக்களை வரிசைப்படுத்தி அவற்றுக்கான தீர்வையும் கண்டறிந்துள்ளார் அவர். ஆனால் இந்த தகவலை அறிந்த பின்னர் சீன நிர்வாகம் அவரை மிரட்டி அவர்களுக்கு சாதகமாக பணிய வைத்திருக்கிறது. இந்த தகவலை சீன முதலிலேயே வெளிப்படுத்தி இருந்தால் கொரோனா பரவுவதை தடுத்திருக்க முடியும் மருந்தும் கண்டு பிடித்திருக்க முடியும்.
வூகான் நகரில் கொரோனா தோற்று அதிகமானதை தொடர்ந்து இரண்டு மாத காலம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட காலக்கட்டத்தில் பத்திரிக்கையாளர் ஒருவர் ஆய்வாளர் ஷியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த பத்திரிகையாளரிடம் அரசாங்கம் மூடி மறைத்த தகவலை கூறியுள்ளார் ஆய்வாளர். ஜனவரி இரண்டாம் தேதியே ஆய்வாளர் ஷியின் ஆய்வகம் மரபணுக்களை வரிசைப்படுத்தி கொரோனாவிற்கான தீர்வை கண்டறிந்துள்ளது.
இந்நிலையில் வூஹான் வைரஸ் ஆய்வகத்தின் தலைவர் யான்யி வாங், தவறான மற்றும் பொருத்தமற்ற தகவல்கள் பொது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்துவதாக கூறியுள்ளார். அதுமட்டுமின்றி கொரோனா தொடர்பான தகவல்களை இன்னும் வெளியிட ஷி உள்ளிட்ட அவரது குழுவினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பின்னர் ஒரு வாரத்தில் சாங்காய் ஆய்வாளர்கள் குழு ஓன்று கொரோனாவுக்கான தீர்வை வெளியிட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களிலேயே அவர்களது ஆய்வகமும் வித்தியாசமான காரணங்களுக்காக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.