உலக சுகாதார மையம் ஓமிக்ரோன் அச்சுறுத்தலால் தடுப்பூசியை பதுக்கி வைக்கும் அபாயம் இருக்கிறது இருப்பதாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது.
உலக சுகாதார மையத்தை சேர்ந்த நிபுணர்களின் குழு நேற்று நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றது. அதன்பின்பு, அம்மையத்தின் தடுப்பூசி துறைக்கான தலைவர் டாக்டர் கேத் ஓ பிரையன் பத்திரிகையாளர்களுக்கு அளித்த நேர்காணலில், தடுப்பூசி விநியோகத்தில், பல மாதங்களாக தடை ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு மாதங்களாகத்தான் பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பூசி சரியாக கிடைத்துக் கொண்டிருக்கிறது. அனைவரும் தடுப்பூசி பெற்றால் தான் கொரோனா ஒழியும். எனினும், ஒமிக்ரான் பரவல் தொடர்பான அச்சுறுத்தலால் தடுப்பூசி விநியோகம் மீண்டும் பாதிக்கப்படும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பொருளாதாரத்தில் முன்னிலையில் இருக்கும் நாடுகள் தங்கள் தேவைக்குப் போக மீதமுள்ள தடுப்பூசிகளை பதுக்கக் கூடிய அபாயம் இருக்கிறது. இதனால் பிற நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல், அங்கு கொரோனா தொற்று அதிகரித்து, மேலும் உருமாற்றமடையும் தொற்றுக்கு வழி வகுக்கும். மேலும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதால் ஏழை நாடுகளுக்கு தடுப்பூசி கிடைக்காமல் போகும் என்று அவர் தெரிவித்துள்ளார்.