தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணியாற்றும் 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. பல சோதனைகளுக்குப் பிறகு நிறுவனங்கள் தடுப்பூசியை கண்டுபிடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
தற்போது இந்தியாவில் கோவாக்சின், கோவிட்சில்ட் போன்ற தடுப்பு மருந்து மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் பணி புரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு கூடுதலாக கோவாக்சின் தடுப்பூசிகளை அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.