சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமானது 1,075 இடங்களில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த முகாமானது 57 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவ குழுவினர், மாணவ மாணவிகள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம செவிலியர்கள் என பலரும் இந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டு ஆர்வத்துடன் தடுப்பூசியை செலுத்தி கொண்டனர். மேலும் இந்த முகாமில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது.