Categories
உலக செய்திகள்

‘கட்டாயமாக போட வேண்டும்’…. இல்ல இதை செய்வோம்…. பிரான்ஸ் அரசின் அதிரடி நடவடிக்கை….!!

தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மருத்துவப் பணியாளர்கள் பணி இடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரானா வைரஸிலிருந்து தப்பிக்க மக்கள் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மேலும் மக்கள் தடுப்பூசி போட்டு கொள்வதற்காக பல்வேறு உலக நாடுகள் சலுகைகளையும் அதே நேரத்தில் கடுமையான விதிகளையும் விதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரான்சில் சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணியாளர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளவில்லை எனில் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்னும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை 3000 பணியாளர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது.

அதிலும், மருத்துவ பணியாளர்கள் சுகாதார துறையில் இருப்பவர்கள் தங்களுக்கான முதல் தவணை தடுப்பூசியாவது செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பிரான்ஸ் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இதுவரை பிரான்சில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் கொரோனோ தொற்றால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |