Categories
உலக செய்திகள்

தயாரான தடுப்பூசி ? 7 நாளில் சோதனை – கொரோனாவுக்கு ஆப்பு வைக்கும் பிரிட்டன் ..!!

கொரோனா தடுப்பு மருந்தை ஏழு நாட்களுக்குள் மனிதர்களிடம் சோதனை செய்ய ஆராய்ச்சி குழு முடிவெடுத்துள்ளது

சீனாவில் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ளது. கொடிய தொற்றான கொரோனா வைரஸ்க்கு  உலக நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடிக்க தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இங்கிலாந்தில் கொரோனா தொற்று தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க 21 ஆராய்ச்சி திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு ரூபாய் 133 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் நடக்கும் ஆராய்ச்சியில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு சோதனையில் வெற்றி பெற்றால் அது உடனடியாக மக்களை சென்றடையவும் பணிக்குழு ஒன்றை அந்நாட்டின் அரசு தயார்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் தயார் செய்யப்பட்ட குறிப்பிட்ட மருந்தின் மாதிரிகள் தயாராக உள்ளது.

அதன் இறுதி கட்ட  சோதனையில் வெற்றி கிடைத்ததும் பொது மக்களை அந்த மருந்து உடனடியாக சென்றடைவது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்க தலைமை அறிவியல் ஆலோசகர் பேட்ரிக் வாலான்ஸ் மற்றும் துணை தலைமை மருத்துவ அதிகாரி ஜோனாதான் வான் டாம் தலைமையில் பணிக்குழு ஒன்றை அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.

அந்த குழு வைரஸ் தடுப்பு மருந்தை மனிதர்களிடம் பரிசோதனை செய்யும் முயற்சியை அடுத்த வாரம் தொடங்க உள்ளது. இங்கிலாந்தில் இருக்கும் தன்னார்வலர்களை வைத்து சோதனையை  மேற்கொள்ள திட்டமிட்டுள்ள அந்த குழுவை வழி நடத்துபவர் தடுப்பூசி பேராசிரியர் சாரா கில்பர்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |