Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி ரொம்ப முக்கியம்…. அதுவரைக்கும் யாரும் வராதீங்க…. அதிரடி காட்டும் பிலிப்பைன்ஸ்…!!

கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் நாட்டு கல்வித்துறை தெரிவித்துள்ளது

உலக நாடுகளில் பரவிய கொரோனா தொற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தி 22,477 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,011 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் புதிதாக 579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பொருளாதாரத்தை இழந்துவிடக்கூடாது என்ற எண்ணத்தில் பிலிப்பைன்ஸ் அரசு ஜூன் 1ஆம் தேதி முதல் சில தளர்வுகளை அறிமுகப்படுத்தியது. ஆனால் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாமல் பள்ளிகள் திறக்காது என அந்நாட்டு கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் கல்வித்துறை செயலர் கூறுகையில், “தொற்றிற்கான சரியான தடுப்பூசியை கண்டுபிடிக்கும் வரை பள்ளிகள் திறக்காது. குழந்தைகளை தனிமனித இடைவெளியுடன் அமர வைப்பதில் உடன்பாடு இல்லை. தங்களது நண்பர்களை குழந்தைகள் நெருங்கும் போது தொற்று பரவும் அபாயம் அதிக அளவில் உள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரம் முதல் ஆன்லைன் மற்றும் தொலைக்காட்சி மூலமாக குழந்தைகளுக்கு பாடங்களை கற்பிக்கும் வகுப்புகள் தொடங்கும். ஆனால் இணைய இணைப்பு இல்லாத ஏழ்மையான சமூகத்தை சேர்ந்த குழந்தைகளின் கல்வி குறித்து மிகுந்த கவலை எழுகின்றது. அவர்களுக்கான மாற்று ஏற்பாடுகள் குறித்தும் யோசித்து வருகின்றோம்” என கூறியுள்ளார்.

Categories

Tech |