தடுப்பூசிகள், மக்களை காக்கும் கருவியாக செயல்படுகிறது என்று உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய தலைவர் Hans Kluge, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பேசியதாவது, தற்போதுள்ள சூழலில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உலக நாடுகள் சர்வதேச பயணத்தை மீண்டும் மேற்கொள்ளும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இல்லையெனில் தவிர்த்து விடலாம்.
மிக தீவிரமாக பரவும் அபாயம் உள்ள இந்த கொரோனா வைரஸ், ஐரோப்பிய பிராந்தியத்தில் சுமார் 26 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகள், அந்த தொற்றுக்கு எதிராக பலனைத்தரும். தற்போது வரை கண்டறியப்பட்ட புதிய உருமாற்றமடைந்த கொரோனாவை இந்த தடுப்பூசிகளினால் கட்டுப்படுத்தலாம்.
எனினும் ஐரோப்பாவில் தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்ட மக்கள் 23% தான். மேலும் இரண்டாம் டோஸை 11% மக்கள் மட்டுமே செலுத்தியுள்ளனர். இந்த தொற்றிலிருந்து நம்மை காக்கும் கருவியாக தடுப்பூசியை பயன்படுத்த வேண்டும். அதற்காக அதை மட்டும் நம்பி கண்மூடித்தனமாக செயல்படக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.