கனடாவில் கொரோனா தடுப்பூசி பாஸ், இம்மாதம் 30 ஆம் தேதியிலிருந்து கட்டாயம் நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருக்கிறார்.
கனடாவில், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்கள் மட்டும் தான் உள்நாட்டு விமானம் மற்றும் ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது மட்டுமல்லாமல் 30-ஆம் தேதியிலிருந்து 24 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமான நேரங்களில் கப்பல் பயணங்களை மேற்கொள்ளும் நபர்களுக்கும் தடுப்பூசி பாஸ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
12 வயதுக்கு அதிகமான நபர்களுக்கு இந்த விதிமுறை பொருந்தும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், அவசர காலத்தில் பயணம் மேற்கொள்பவர்கள் மற்றும் மருத்துவ காரணங்களால் தடுப்பூசி செலுத்த இயலாதவர்கள் போன்ற சிலருக்கு இந்த கட்டுப்பாட்டிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் நாட்டில் அரசு பணியாளர்கள் அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கொள்ளாதவர்கள் சம்பளமின்றி பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.