கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு நகராட்சி சார்பில் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்தில் உள்ள கடையநல்லூர் நகராட்சிப் பகுதியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாமில் கலந்துக்கொண்டு தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கிட கடையநல்லூர் நகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்தின்படி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் ஆணையிட, நகராட்சி சுகாதார அலுவலர் நாராயணன் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் சிவா மற்றும் சக்தி ஆகியோர் இணைந்து நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
இந்த குலுக்கல் முறையில் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் கோல்டு கிமிரி நிறுவன உரிமையாளரான மக்தும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் குலுக்கல் முறையில் பரிசு பெற வேண்டிய நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கிரைண்டர் மற்றும் மிக்ஸியை பரிசுப் பொருள்களாக வழங்கியுள்ளார். அப்போது விழாவில் நடந்த குலுக்கலில் ராஜம்மாள் என்பவருக்கு கிரைண்டரும், ருக்மணி என்பவருக்கு மிக்ஸியும் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.