சீனாவில் சுமார் 550 நபர்களுக்கு கொரோனாவாக் தடுப்பூசி அளித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சீனாவின் “தி லான்செட்” என்னும் தொற்றுநோய் ஆராய்ச்சி இதழ், கொரோனாவாக் தடுப்பூசி தொடர்பில் ஆராய்ச்சி கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில் சினோவாக் தயாரித்த கொரோனாவாக் தடுப்பூசி பாதுகாப்புடையது என்று தெரிவித்துள்ளது. இத்தடுப்பூசி 3 லிருந்து 17 வயது வரை உள்ளவர்களுக்கு மற்றும் இளம் வயதினருக்கும் வலிமையான ஆண்டிபாடி சக்தியை ஏற்படுத்தியிருக்கிறது .
இதனை 550 நபர்களுக்கு செலுத்தி சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் சிலருக்கு 2 டோஸ்களும் செலுத்தப்பட்டது. அவர்களுக்கு 96% பலனளித்துள்ளது. முதல் நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது, 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசி மற்றும் 3 மைக்ரோகிராம் தடுப்பூசி அளிக்கப்பட்டது.
இதில் 3 மைக்ரோகிராம் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு 100% பலனளித்துள்ளது. மேலும் 1.5 மைக்ரோகிராம் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு 97% பலனளிப்பதாக தெரியவந்துள்ளது. இது மட்டுமல்லாமல், வழக்கமாக தடுப்பூசி செலுத்திய பின்பு ஏற்படும் வலிகள் மட்டுமே இருந்துள்ளது. வேறு எந்த வித விளைவுகளும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.