குரங்குகளின் தடுப்பூசியை வைத்து கொரோனா தொற்றிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியை ஆய்வாளர்கள் மேற்கொண்டுள்ளனர்
உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி ஏராளமான உயிர் பலியை எடுத்துள்ள நிலையில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் வைரஸை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸினால் சுவாசம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்படுவதால் இதற்கு முன்னர் இதேபோன்று வந்த வைரஸ் பாதிப்பு களுடன் ஒப்பிட்டு இதனை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கொரோனா என்பது பொதுப்பெயர் தான், இதற்கு முன்னதாக உருவான சார்ஸ், மெர்ஸ் உள்ளிட்ட நோய்களும் கொரோனா போன்ற வைரஸ் மூலம் தான் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பு கோவிட் 19 என்ற பிரிவை சேர்ந்தது. இந்நிலையில் இதற்கு முன்னதாக மெர்ஸ் வைரசுக்கு கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசி கொரோனா வைரஸ் பாதிப்பு தடுப்பூசியை கண்டுபிடிக்க உதவுமா என்ற சோதனையை அமெரிக்க ஆய்வு மையம் மேற்கொண்டு வருகிறது.
மெர்ஸ் வகையில் கொரோனா ஒத்துப்போனால் ChAdOx1 SARS2 என்ற குரங்குக்கு பயன்படுத்தும் தடுப்பூசி கொரோனாவை தடுப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அமெரிக்க தேசிய சுகாதார கழகம் நடத்திய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின் படி மூன்று குழுக்களாக தடுப்பூசிகள் பிரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்டத்தில் ஆய்வுகள் இருந்தாலும் மக்களின் தேவைக்காக இணையத்தளத்தில் ஆய்வு குறித்து வெளியிட்டுள்ளனர்.
தற்போதைய சூழல் படி மெர்ஸ் நோய் தடுப்பூசி கொண்டு கோவிட்19 தடுப்பூசியை தயார் செய்து மனிதர்களிடம் முதல் கட்ட சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த பரிசோதனை சவுதி அரேபியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதற்கு முன்னதாக மலேரியா, எச்.ஐ.வி., காசநோய் போன்றவற்றின் ஆய்வுகளுக்கு குரங்குகளின் தடுப்பூசியை பயன்படுத்தியதாக ஆய்வகம் தெரிவித்துள்ளது.