Categories
உலக செய்திகள்

தடுப்பூசி போட்டவர்கள் “ஜோம்பிஸாக மாறிவிட்டார்களா..?” வெளியான புகைப்படம்..!!

தடுப்பூசியின் வருகையால் கொரோனா முடிவுக்கு வந்துவிடும் என்று உலக நாடுகள் அனைத்தும் நம்பிக் கொண்டிருந்த நிலையில் சமூக ஊடகங்களில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் ஜோம்பிஸாக மாறியதாக ஒரு பயங்கரமான பதிவு பரவி வருகின்றது.

தனியார்  தொலைக்காட்சி செய்தி புல்லட்டின் ஸ்கிரீன் ஷாட்டில் ஒரு மருத்துவமனை வார்டு முழுவதும் ரத்தக் கறைகள் சிந்தப்பட்ட கிடப்பதாக உள்ள புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து பகிரப்பட்டு வருகின்றது. ஸ்கிரீன் ஷாட்டில் சிஎன்என் என்ற லோகோவும் ஒரு ஸ்டிக்கர் உள்ளது. அதில் பிரேக்கிங் நியூஸ் என்று கொரோனா தடுப்பூசி போட்ட நோயாளிகள் மற்ற நோயாளிகள் சாப்பிட தொடங்கியதால் மருத்துவமனை மூடப்பட்டது என்ற பதிவு வேகமாக பரவி வந்தது.

https://twitter.com/ngomba_thomas/status/1340658816950689794

மேலும் தடுப்பூசி மக்களை ஜோம்பிஸாக மாற்றுகிறது என்று கூறும் தகவல் பரவி வருகிறது. மேலும் இந்த தகவலை பொய்யென்று இந்தியாடுடே செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளது. ஸ்கிரீன் ஷாட்டில் பயன்படுத்தப்படும் மருத்துவமனை பழைய படம் என்றும், அமெரிக்காவின் வடக்கு பிலடெல்பியாவில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட பதிவு என்றும் இந்தியா டுடே கூறியுள்ளது.

மேலும் கொரோனா தடுப்பூசி போட்ட மக்கள் மனிதனை சாப்பிடும் சோம்பி ஆக மாறுவதாக கூறப்பட்ட தகவல் முற்றிலும் போலியானது என்று கூறப்படுகிறது. மேலும் பல உண்மைத் தன்மையை கண்டறியும் நிறுவனங்களும் சோம்பி கதையை போலியானது என்று கூறி வருகின்றனர். இதனை மக்கள் யாரும் நம்ப கூடாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |