Categories
சினிமா தமிழ் சினிமா

தடுப்பூசி போட்டுக் கொண்ட கௌதம் கார்த்திக்… வெளியான புகைப்படம்..!!

நடிகர் கௌதம் கார்த்திக் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டார். மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு தமிழக அரசு வலியுறுத்தி வருகின்றது. பிரபலங்கள் பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படத்தை வெளியிட்டு வருகின்றன. இந்நிலை நடிகர் கௌதம் கார்த்திக்கும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: ” நான் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டேன். நாமும் நம்மைச் சுற்றி உள்ளவர்களும் பாதுகாப்புடன் இருப்பதற்காக தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து கொண்டு, மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |