ஜம்மு-காஷ்மீரில் 120 வயதான மூதாட்டி ஒருவர் தடுப்பூசி போட்டுக் கொண்டு,தனக்கு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு வருகின்றது. இவற்றிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி என்பதால் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. பெரும்பாலான கிராம மக்கள் தடுப்பூசி போடுவதற்கு முன் வராமல் இருந்துவருகின்றனர். ஆனால் ஜம்மு-காஷ்மீரில் என்ற கதியாஸ் கிராமத்தை சேர்ந்த தோலி தேவி என்ற மூதாட்டிக்கு 120 வயதாகும். இந்த வயதிலும் அவர் மிக சுறுசுறுப்பாக வாழ்ந்து வருகிறார்.
அந்த கிராமத்தில் முதலில் இவர்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார். இதுகுறித்து அவர் கூறிய போது தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எனக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதனால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்தினார். இதையடுத்து அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதை கௌரவிக்கும் விதமாக வடக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ராணுவ அதிகாரிகள் அந்த பாட்டியின் வீட்டிற்கு நேராக சென்று அவரை கௌரவித்தனர்.