கலிபோர்னியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
அமெரிக்கா நாட்டின் வடக்கு கலிபோர்னியாவில் உள்ள மலைபகுதியில் திடீரென காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீயானது அப்பகுதியில் உள்ள சிறிய நகரத்தில் இருக்கும் பழமையான கட்டிடங்கள் போன்றவற்றில் பரவியுள்ளது. இவ்வாறு புதிதாக உருவாகிய காட்டுத்தீயினால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனையடுத்து காட்டுத்தீயானது வியாழக்கிழமையிலிருந்து எறிவதால் அப்பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தீயில் கருகி நாசமாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்து வருகின்றனர். இந்த காட்டுத்தீயானது விவசாய நிலங்களில் சுமார் 64 கி.மீ. வேகத்தில் பரவி வருகிறது. மேலும் பழமை வாய்ந்த கட்டிடங்கள், விடுதிகள், மதுபான கடைகள், எரிவாயு நிலையங்கள் போன்றவை தீயில் கருகி நாசமாகியுள்ளது.