அதிபர் கிம் ஜாங் உன் மிகவும் மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் புகைப்படமானது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் என்றவுடன் நமது அனைவரின் நினைவுக்கும் முதலில் வருவது அவருடைய ஆட்சிமுறை மற்றும் கொலு கொலு கன்னங்கள். அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் வட கொரியாவின் அதிபராக இருந்து வருகிறார். இதனையடுத்து நெடுநாட்களாக அவர் உடல் பருமன் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வந்தார் என தகவல்கள் கசிந்தன. இதற்கிடையில் தற்பொழுது பொது நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை உள்ளூர் ஊடகம் வெளியிட்டுள்ளது. அதில் அவர் மிகவும் இளைத்து அழகான தோற்றத்துடன் காணப்பட்டார். ஒருவேளை அவர் உடல் நலக்குறைவால் இளைத்து இருக்கலாம் என்று கருத்துக்கள் வெளியாகின.
ஆனால் இதனை முற்றிலும் வட கொரியா அரசு ஊடகம் மறுத்து செய்தி ஒன்றை தெரிவித்துள்ளது. அதில் ” அதிபர் கிம் ஜாங் உன் உடல் எடையை குறைத்துள்ளார்” என்று கூறியுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் அவர் மிகவும் மெலிந்து நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணிவகுப்பில் எடுக்கப்பட்ட புகைப்படமானது வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதிலும் அதிபர் உடல் நலக்குறைவால் உடல் இளைத்துள்ளார் என்று பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.