தென்னிந்திய திரை உலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் 9ஆம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமான 4 மாதத்தில் விக்னேஷ் சிவன் தனது instagram பக்கத்தில் தனக்கும் நயன்தாராவுக்கும் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது என்று அறிவித்துள்ளார். இவர்களுக்கு குழந்தை பிறந்துள்ளது தான் தற்போதைய ஹாலிவுட் ஹாட்பிட்டாக உள்ளது. இந்நிலையில் வாடகை தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனி குழுவை தமிழக அரசு அமைத்தது.
வாடகைத்தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவு திருமணம் செய்து கொண்டோம். துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகை தாயாக இருந்தார். அதனை தொடர்ந்து வாடகைக்குதாய் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தோம் என்று நயன்தாரா விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து கமர்ஷியல் முறையில் வாடகை தாயை அமர்த்துவதை தடை செய்து வந்த சட்ட 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. மேலும் அந்தச் சட்டம் அமலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா வாடகை தாயாக பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.