Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை எதிரொலி….. 3 வது பெருமழையை தாங்குமா?…. சென்னைக்கு புதிய சிக்கல்….!!!!

சென்னையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து முதல் இரண்டு கனமழைக்கு தப்பித்துக் கொண்டது. அதாவது வெளுத்து வாங்கிய கன மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் வடிகால் பணிகளால் தண்ணீர் தேங்காமல் தப்பித்துக் கொண்டது. இரவு, பகல் பாராமல் அமைச்சர்கள் அதிகாரிகளும் ஈடுபட்டனர். மீட்பு பணிகளும் வேகமாக முடக்கி விடப்பட்டது. தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் அடுத்த சில மணி நேரத்தில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மூன்றாவது மழைக்கு சென்னை தாக்கு பிடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. ஏனென்றால் முதல் இரண்டு மழைகள் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் முழுவதும் நிரம்பிவிட்டது.

இதனால் மீண்டும் ஒரு பெருமழை வெளுத்து வாங்கினால் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் வெளியேறி நகருக்குள் நுழைந்து விடும். எனவே வடிகால்கள், கால்வாய்கள் உள்ளிட்டவை சரியான முறையில் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் தண்ணீர் தேங்கும் வகையில் மிகப்பெரிய டேங்குகள் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவை ஒன்றும் சிறப்பான முறையில் இணைக்கப்பட்டு இருப்பது அவசியம் மேலும் மழை நீர் சேகரிப்பு திட்டத்தின் மூலம் நிலத்தடி நீராக மாற வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மாநில திட்டக்குழு உறுப்பினரான சுல்தான் இஸ்மாயில் கூறியது, மழைநீர் வடிகால் கட்டமைப்புகள் மட்டும் போதுமானதல்ல.

ஏனென்றால் கடல் மட்டத்தை விட ஆற்றின் மட்டம் உயர்ந்து விட்டால் சிக்கல் ஏற்படும். எனவே பல்வேறு இடங்களை மையமாகக் கொண்ட மழைநீர் சேகரிப்பு திட்டம் அவசியம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இதனையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேட்டி கூறியது, மழைநீர் வடிகால், கால்வாயில் அடைப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் தேங்கிய நிலை ஏற்பட்டால் விரைவாக வந்து வெளியேற்றும் நடவடிக்கைகள் பொறியாளர்கள் உதவியுடன் மேற்கொண்டு வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டுமொத்தமாக சென்னை மழை நீர் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க புதிய மற்றும் மிகப்பெரிய அளவிலான திட்டங்கள் தேவைப்படுவதாக வல்லுநர்கள் பலரும் கூறுகின்றனர்.

Categories

Tech |