Categories
உலக செய்திகள்

தளர்வு செய்யப்பட்ட கட்டுப்பாடுகள்…. விரைவில் அமல்ப்படுத்தப்படும்…. அயர்லாந்து அரசின் நடவடிக்கை….!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

வடக்கு அயர்லாந்தில் கொரோனா தொற்றுக்கான அனைத்து கட்டுப்பாடுகளும் முழுமையாக தளர்வு செய்யப்பட்டு விரைவில் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த வாரம் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஒரு தனியார் விடுதியில் சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இனி அனைவரும் அரங்குகளின் உட்புறத்தில் அமர்ந்திருக்க வேண்டிய தேவையில்லை.

மேலும் அனைவரும் நின்று கொண்டே காணலாம். இதனை அடுத்து இரவு விடுதிகள் அனைத்தும் வரும் அக்டோபர் 31-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து உணவகங்களில் அமர்ந்து உண்ணும் விதிகளும் தளர்வு செய்யப்பட்டுள்ளன. இதனால் மக்கள் சமூக ரீதியாக நெருங்கும் அவசியம் ஏற்படும். இருப்பினும் மக்கள் நேருக்கு நேர் சந்திப்பை தவிர்க்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Categories

Tech |