வட கொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டதாக கூறி அந்நாட்டின் தலைவர் அவர்களை கடுமையாக கண்டித்துள்ளார்.
வடகொரியாவில் இதுவரை எவருக்குமே கொரோனா உறுதி செய்யப்படவில்லை என்று அந்நாடு கூறி வருகிறது. இந்நிலையில் வடகொரிய அரசின் உயர் அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அலட்சியமாக செயல்பட்டுள்ளார்கள்.
இதனால் வடகொரியா பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனையடுத்து வட கொரிய நாட்டின் தலைவரான கிம் ஜாங் உன் அந்நாட்டின் உயர் அதிகாரிகளை கடுமையாக கண்டித்துள்ளார் என்று பிரபல ஊடகம் ஒன்றில் தகவல் வெளியாகியுள்ளது.