Categories
உலக செய்திகள்

அடுத்த வாரம் அந்த நாளன்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்த வாய்ப்பு…. அமெரிக்கா எச்சரிக்கை….!!!

வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது.

அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் எதிர்ப்பையும், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானத்தையும் மதிக்காமல் கடந்த 2006ம் ஆண்டு முதல் இதுவரை ஆறு அணுகுண்டு சோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இதற்கிடையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஹைட்ரஜன் அணுகுண்டு சோதனையை நடத்தியது. இதனைத் தொடர்ந்து வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், 2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த டொனால்ட் டிரம்பை நேரில் சந்தித்து பேச இருந்ததால் அணுகுண்டு சோதனையை தனக்கு தானே தடை செய்து கொண்டது.

இதனை தொடர்ந்து கிம் ஜாங் அன் மற்றும் டிரம்புடனான இரண்டாவது சந்திப்பு தோல்வியில் முடிந்ததால் இதுவரை அணுகுண்டு சோதனையை வடகொரியா நடத்தவில்லை. இந்த நிலையில் வரும் 15ம் தேதி வடகொரியாவின் நிறுவனர் கிம் இல் சுங்கின் 110வது பிறந்த நாள் விழா பிரமாண்டமாக கொண்டாட வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்நாள் பொது விடுமுறை நாளாகும்.

இதற்கிடையில் அமெரிக்க அரசு அதிகாரி ஒருவர் அந்நாளில் வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்த உள்ளதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில். “நான் அதிகம் ஊகிக்க விரும்பவில்லை, இருப்பினும் கிம் இல் சுங்கின் 110வது பிறந்த நாளன்று  மற்றொரு ஏவுகணை அல்லது அணு ஆயுத சோதனை இருக்கலாம். ஏனெனில் எந்தவொரு பதற்றமும் ஏற்படுத்தாமல் வடகொரியா விழாவினை கடந்து சென்று விடாது” என்று குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தென்கொரியாவுக்கு  கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ  ஜாங் சமீபத்தில் ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |