வடகொரியாவின் கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் அனைவரிடத்திலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதையும் தங்கள் வசம் திரும்பி பார்க்க வைப்பதில் வடகொரியா எப்பொழுதும் ஒரு தனிநாடாக உள்ளது. அதிலும் அங்கு அவ்வளவு சுலபமாக அயல்நாட்டினர் நுழைய இயலாது. குறிப்பாக அங்கு வாழும் மக்களுக்கே அவர்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன. மேலும் அங்கு கடுமையான கட்டுப்பாடுகளும் சட்டங்களும் விதிக்கப்பட்டுள்ளன. அதிலும் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். அவரின் உத்தரவின்றி ஒரு ஈ கூட நகர முடியாது. இனி அங்குள்ள கடுமையான சட்டங்கள் மற்றும் தண்டனைகள் குறித்து பார்க்கலாம்.
- வெளிநாட்டு படங்களை கண்டாலோ அல்லது வெளிநாட்டு இசையை கேட்டாலோ சிறை தண்டனை வழங்கப்படும்.
- வெளிநாட்டில் வசிப்பவர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டால் சுட்டுக் கொல்லும் அளவிற்கு கடுமையான தண்டனை அளிக்கப்படும்.
- வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆலோசனையில் இருக்கும்பொழுது எவரேனும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும்.
- குடிமக்கள் மீது ஏதேனும் குற்றம் இருந்து அது நிரூபிக்கப்பட்டால் அவரின் பெற்றோர், தாத்தா, பாட்டி குழந்தைகள் உட்பட அனைவரும் சேர்ந்து அந்த தண்டனையை அனுபவிக்க வேண்டும்.
- அனைத்து ஆண்களும் பெண்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட 28 சிகை அலங்காரங்களுள் ஒன்றை மட்டுமே செய்து கொள்ள முடியும். அதிலும் பெண்களுக்கு 18 என்றும் ஆண்களுக்கு 10 என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிபரின் சிகை அலங்காரத்தை அந்த பட்டியலில் சேர்க்கவில்லை. அவர் தனியாக தெரிவதற்காகவே இச்சட்டமானது கடந்த 2013 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
- கூடைப்பந்து விளையாட்டுக்கென்று சிறப்பான தனி விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
- வடகொரியாவின் தலைநகரான பியாங்யாங்கில் பணக்காரர்களும், அதிக செல்வாக்கு நிறைந்தவர்கள் மட்டுமே வசிக்க வேண்டும். குறிப்பாக சாதாரண மக்கள் அங்கு வசிக்கக்கூடாது.
- பள்ளி குழந்தைகள் தாங்கள் அமர்ந்து படிக்கும் இருக்கைகளுக்கு அவர்களே கட்டணம் செலுத்திக் கொள்ள வேண்டும். இதனை பள்ளிக் கட்டணத்துடன் சேர்த்து கட்டக்கூடாது.
- கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பைபிளை விநியோகித்த கிறிஸ்தவப் பெண் ஒருவரை கைது செய்து தூக்கிலிட்டுள்ளனர். அதாவது மக்கள் வேறு மதத்திற்கு மாறி விடுவார்கள் என்ற பயம் காரணமாக இச்சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
- மின்சார அடுப்பை உபயோகப்படுத்தினால் தண்டனை வழங்கப்படும். அதிலும் இரவு நேரங்களில் மின்தடை அமலில் இருக்கும். மின்தடை பற்றாக்குறை காரணமாக இம்முடிவானது எடுக்கப்பட்டுள்ளது.
- ஆண்கள் 10 ஆண்டுகளும், பெண்கள் 7 ஆண்டுகளும் கட்டாயமாக ராணுவத்தில் பணியாற்ற வேண்டும்.
- வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு பின்னர் தான் வட கொரியாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். எப்பொழுதும் அவர்களுடன் ஒரு வழிகாட்டி செல்வார். அந்த நபரை தவிர்த்து வேறு உள்ளூர்வாசிகளிடம் சுற்றுலா பயணிகள் வாய் திறந்து பேசினால் கைது செய்யப்படுவார்கள்.
- வடகொரியாவில் இருந்து வெளிநாட்டிற்கு அவ்வளவு எளிதாக செல்ல முடியாது. குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் வெளிநாடு செல்ல முயற்சி செய்பவர்கள் சுட்டுக் கொல்லப்படுவார்கள்.
- அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உண்மையாக இருக்கவேண்டும். அவர்களுக்கு அவமரியதையாக எந்தவொரு செயல்கள் கருதப்பட்டாலும் உடனடியாக கடுமையான தண்டனை வழங்கப்படும்.
- கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்தல் மிகப்பெரிய குற்றமாகும்.
- வடகொரியாவில் கம்யூனிஸ்ட் புரட்சிக்குப் பின்னர் முதல் தலைவராக கிம் 2 சங் பதவியேற்றார். அதிலும் கிம் 2 சங்கின் மறைவுக்குப் பின்னால் அவருடைய மகனும் பேரனும் போட்டியின்றி அதிபராக பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.
- 17 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும். இதில் ஆச்சரியம் என்னவென்றால் அதிபர் கிம் மட்டுமே வேட்பாளராக போட்டியிடுவார் அவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- வடகொரியாவில் ஜூச்சே நாள்காட்டி கடைகடைப்பிடிக்கபடுகிறது. இது உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படும் நாள்காட்டி அல்ல. அதாவது வடகொரியாவின் முதல் அதிபர் கிம் 2 சங்கின் பிறந்தநாளான 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி நாள்காட்டியின் வருடப்பிறப்பாக துவங்கும்.
- சிறைகளில் 2,00,000த்திற்கும் அதிகமான அரசியல் குற்றம் செய்த வடகொரியார்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- வெளிநாட்டினர் வட கொரியாவிற்கு நுழையும் முன்பாக அவரின் தலை முதல் கால் வரை அனைத்து பாகங்களும் சோதனை செய்யப்படும். மேலும் அவரின் தொலைபேசி, காகிதம், இசைத்தட்டுகள் போன்ற அனைத்து உடைமைகளும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவர்.
- வடகொரியாவில் ஐபோன், மடிக்கணினி மற்றும் தொலைக்காட்சிப் பெட்டி போன்ற சாதனங்களை பயன்படுத்தக் கூடாது.
இந்த சட்டங்கள் அனைத்தையும் மக்கள் எவ்வாறு பின்பற்றுகின்றனர் என்பதை நினைத்துப் பார்த்தாலே நமக்கு மலைப்பாக உள்ளது. இன்னும் நமக்கு தெரியாமல் அவர்கள் என்னென்ன சட்டங்களை வகுத்துள்ளார்கள் என்பது தெரியவில்லை.